எச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி


எச்சரிக்கை: பேஸ்புக்கில் பரவும் மோசடி

சமூக வலையமைப்பு தளங்களில் பேஸ்புக் தளம் தனி இடத்தைப் பிடித்துள்ளது. அது மற்றவர்களுக்கு பயனாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு வசதியான கருவியாக திகழ்கிறது. பேஸ்புக் தளத்தில் தொடர்ந்து பல்வேறு மோசடிகள் (Scams) நடந்தேறி வருகிறது. இவற்றிலிருந்து ஒரு சிலர் தப்பித்தாலும், ஆயிரக்கணக்கானோர் தினமும் மாட்டிக் கொள்கின்றனர். தற்போது பேஸ்புக்கில் பரவும் ஒரு மோசடியைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்  தளத்தில் ஒரு போட்டோ பரவி வருகிறது. அது கீழே,


இந்த போட்டோவில் "பேஸ்புக் சரிபார்ப்புக் குழுவிலிருந்து செய்தி எனவும், பேஸ்புக்கில் நடைபெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கு செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக கணக்கை உறுதி செய்ய வேண்டும், உறுதி செய்யாத கணக்குகள் நீக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கணக்கை உறுதி செய்ய போட்டோ Description பகுதியில் உள்ள சுட்டியை கிளிக் செய்ய சொல்கிறது.

அதில் இது போல சுட்டி இருக்கும்: http://bitly.com/OOWFvC?secureid=1407

இதை கிளிக் செய்தால் கூகிள் translate பக்கத்திற்கு சென்று,http://ilovemyiphone.mobi/r/?id=sdnasadasasda என்ற பக்கத்திற்கு சென்று, பிறகு கடைசியாக http://facebook.com.info.tm/ என்ற பக்கத்திற்கு செல்கிறது.

 http://facebook.com.info.tm/ என்பது பேஸ்புக் தளத்தின் முகவரி அல்ல, இதுinfo.tm என்ற முகவரியின் சப்-டொமைன் ஆகும்.

இங்கு தான் உங்கள் பேஸ்புக் கணக்கை உறுதி செய்யும் வழிமுறையை சொல்கிறது. அப்போது Developer என்ற அப்ளிகேசனுக்கு நீங்கள் அனுமது கொடுக்க வேண்டும். அதில் சொன்னது போல நீங்கள் செய்தால் அந்த போட்டோ உங்கள் பேஸ்புக்கில் கணக்கில் வெளிவரும். மேலும் அந்த போட்டோவில் உங்கள் நண்பர்கள் அனைவர் பெயரும் Tag செய்யப்படும்.

பிறகு  மீண்டும் முதலில் இருந்து தொடங்கும், மேலுள்ள போட்டோவுக்கு கீழே உள்ளதில் இருந்து மறுபடியும் படியுங்கள்.

இதிலிருந்து நாம் தப்பிப்பது எப்படி?

மிக சுலபம். அந்த போட்டோவை தவிர்த்துவிடுங்கள். உங்கள் கணக்கில் அது இருந்தால் நீக்கிவிடுங்கள். உங்கள் நண்பர்கள் கணக்கில் இருந்தால் அவர்களை நீக்கச் சொல்லுங்கள்.

நாம் தப்பித்தால் மட்டும் போதுமா?

நாம் தப்பித்தால் மட்டும் போதாது, மற்றவர்களையும் காப்பாற்ற (???) இரண்டு செயல்கள் செய்ய வேண்டும்.

ஒன்று, கணக்கை உறுதி செய்ய ஒரு அப்ளிகேசனுக்கு அனுமதி கொடுக்க சொல்கிறது அல்லவா? அந்த அப்ளிகேசன் பற்றி பேஸ்புக்கில் புகார் அளியுங்கள்.

அந்த அப்ளிகேசன் முகவரி: http://goo.gl/cB4f6 (முகவரி பெரியது என்பதால் சுருக்கியுள்ளேன்) அந்த அப்ளிகேசனை இதுவரை 4,10,000 நபர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

அந்த பக்கத்தின் கீழே Report app என்பதை கிளிக் செய்யுங்கள்.


Report to Facebook என்பதில் "I'm reporting the app for spam" என்பதை கிளிக் செய்யுங்கள்.

விருப்பப்பட்டால் ஸ்க்ரீன்ஷாட் பகுதியில் அந்த போட்டோவை சேருங்கள்.

பிறகு Submit என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

நன்றி :ப்ளாக்கர் நண்பன் 


Comments

 1. நிச்சயம் இந்த பதிவு பலருக்கும் பயன்படும் பதிவாக இருக்கும்

  ReplyDelete
 2. கருத்துக்கு நன்றி.. by.99likes

  ReplyDelete
 3. நல்ல பயன்னுள்ள தகவல்....உங்கள் பகிர்வுக்கு நன்றி........

  நன்றி,
  பிரியா
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 4. பலரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

  ReplyDelete

Post