ஆராய்ச்சியாளர்கள் சாதனை.கீரையிலிருந்து மின்சாரம்


உணவாக மட்டும் கருதப்பட்ட கீரையிலிருந்து தற்போது உயிரியல் கலப்பு(Bio-Hybrid) சோலார் செல்கள் தயாரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வென்டர்பில்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பசலைக் கீரையில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் புரதம் சூரிய ஒளியை மின் வேதியியல் ஆற்றலாக மாற்றும் தன்மை கொண்டது எனவும், இதை சிலிகானுடன் சேர்த்து சோலார் செல்களை தயாரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
புவியில் ஒக்சிஜனுக்கு அடுத்து அதிகம் காணப்படும் தனிமங்களில் சிலிக்கானும் ஒன்று. இது ஒரு அலோகம். குறை மின்கடத்தி கருவிகளில் இது பயன்படுகிறது.
போட்டோ சிஸ்டம் 1 என்ற சிறப்பு புரதம் பசலைக் கீரையில் உள்ளது. இதனை சிலிக்கானுடன் சேர்த்து பயோஹைப்ரிட் என்ற சோலார் செல்லை தயாரித்தனர்.
இது மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதை விட குறைந்த செலவே ஆகும்.
மேலும் சில தாவரங்கள் கீரைக்கு ஒப்பான புரதங்களை பெற்றுள்ளதால், பயோஹைப்ரிட் சோலார் செல்கள் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களையும் எளிதில் பெறலாம்.

Comments

Post