அழகான புகைப்பட ஆல்பத்திற்கு இணையத்தளம்.


இது புகைப்படங்களின் காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தற்போது எல்லா நிகழ்வுகளும் புகைப்படங்களாக பதிவாக கொண்டிருக்கின்றன.
எனவே சுவாரஸ்யமும், புதுமையும் கலந்த புகைப்பட சேவையாக 16 பிக்ஸ் அறிமுகமாகியிருக்கிறது.
இந்த தளம் உங்கள் வாழ்க்கையை 16 புகைப்படங்களில் உருவாக்கி தருகிறது. வாழ்க்கையை என்று சொல்வது கொஞ்சம் மிகை தான். ஆனால் நீங்கள் சம‌ர்பிக்கும் புகைப்படங்களில் இருந்து 16 சிறந்த புகைப்படங்களை தெரிவு செய்து அவற்றை கொண்டு அழகான புகைப்பட கூட்டுச்சித்திரத்தை(கொலேஜ்) உருவாக்கி தருகிறது.
உங்கள் புகைப்பட ஆல்பத்தை இந்த தளத்தின் வசம் ஒப்படைத்தால் அவற்றில் இருந்து 16 புகைப்படங்களை தானாக தெரிவு செய்து தருகிறது இந்த தளம்.
இதற்காக இந்த தளத்தில் முதலில் உறுப்பினராக வேண்டும் அல்லது பேஸ்புக் மூலம் உள்ளே நுழைய வேண்டும். அதன் பிறகு புகைப்பட ஆல்பத்தை சமர்பித்தால் அவற்றை 16 படங்களாக சுருக்கி கூட்டுச்சித்திரமாக்கி தருகிற‌து. டெஸ்க்டாப், பேஸ்புக், பிக்காசோ, போட்டோபக்கெட் என எந்த‌ இடத்தில் இருந்தும் புகைப்படங்களை சமர்பிக்கலாம்.
புகைப்படங்களின் பல்வேறு அம்சங்களை பரிசீலித்து அவற்றில் இருந்து சிற‌ந்த புகைப்படங்களை தெரிவு செய்யும் அல்கோரிதத்தின் அடிப்படையில் கூட்டுச்சித்திரம் உருவாக்கப்படுவதாக இந்த தளம் பெருமை பட்டு கொள்கிறது.
இந்த தெரிவில் உடன்பாடு இல்லை என்றால், புகைப்படத்தை நீக்கி விட்டு வேறு பொருத்தமான புகைப்படத்தை சேர்த்து கொள்ளலாம். ஆக ஒன்றிரண்டு புகைப்படங்கள் பொருந்தாவிட்டாலும் மாற்றிக்கொள்ளலாம்.
அதன் பின் இதற்கான வடிவமைப்பு மற்றும் பின்னணியையும் தெரிவு செய்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த புதிய புகைப்பட ஆல்பத்தை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் உங்கள் நண்பரக்ளோடு ஒரு கிளிக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த இணையத்தளம் அறிமுக நிலையில் தான் உள்ளது. எனவே இதில் எதிர்பார்க்கும் வசதி மற்றும் அம்சங்கள் குறித்து நீங்கள் வாக்களிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

  1. மிகவும் தேவைப்படும் பகிர்வு தான்...

    என்ன நண்பரே... உங்கள் பதிவுகள் dashboard-ல் வருகிறது... தளத்தில் வந்து பார்த்தால் அந்தப் பதிவு இருப்பதில்லை... ஏன் என்று தெரியவில்லை....

    ReplyDelete
  2. ok brother ena nu pakura...

    கருத்துக்கு நன்றி..

    ReplyDelete

Post