கணனியை முடக்கும் வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கைஅமெரிக்க உளவுத்துறை அண்மையில் பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதித்த கணனியில் அதன் இயக்கம் முடக்கப்பட்டு, திரைக்காட்சி நிறுத்தப்பட்டு, நீங்கள் தவறான தளத்தைப் பார்க்க முயற்சிக்கிறீர்கள்.
எனவே உங்கள் கணனியின் இயக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட வேண்டுமானால் குறிப்பிட்ட கட்டணத்தை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பும், அபராதத் தொகை செலுத்துவதற்கான லிங்க்கும் தரப்படுகிறது.
இது போல நிகழ்வுகள் அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி, பன்னாட்டளவிலும் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து எப்.பி.ஐ அமைப்பின் இன்டர்நெட் குற்றப் பிரிவு அதிகாரி டோன்னா கிரிகோரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது Reveton ransomware என்னும் வைரஸால் ஏற்படுகிறது. பலர் எங்களுக்கு இது குறித்து புகார் அனுப்பி உள்ளனர்.
பலர் அபராதத் தொகையையும் செலுத்தி உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையினை எப்.பி.ஐ எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து வெளியேற இதுவரை எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பிற்கும் அப்டேட் பைல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

  1. தகவலுக்கு மிக்க நன்றி...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post