விண்டோஸ் 8 இன் சுவரஸ்யமான தகவல்கள்.பயனாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது விண்டோஸ் 8விண்டோஸ் 8 ல் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அக்டோபர் 26ம் திகதி இதன் பயன்பாடு வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
இதன் முன்னோட்டமாக, கடந்த ஓகஸ்ட் 1 ம் திகதி அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள, கனணி தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான வழங்கல் அக்டோபர் 26ம் திகதி நடைபெறும். அதே நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் டேப்ளட் பிசி, விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் ஒரு விடயம் இதில் மர்மமாகவே உள்ளது. அது இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விலையாகும். சிஸ்டம் பில்டர்கள் என அழைக்கப்படும் கனணி தயாரிப்பாளர்களுக்குக் கூட என்ன விலைக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து மைக்ரோசாப்ட் இன்னும் மவுனம் சாதித்து வருகிறது. அதே போல விண்டோஸ் 8 வாங்க விரும்பும் பொதுமக்களுக்கான விலையும் அறியப்படவில்லை.
இந்த முறை மைக்ரோசாப்ட் மக்களின் தேவையைப் பெரிய அளவில் நிறைவேற்றியாக வேண்டும். விண்டோஸ் 8, பொதுமக்களுக்கு வெளியாகும் நாளில், குறைந்தது 5,000 மெட்ரோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக மைக்ரோசாப்ட் ஸ்டோரில் கிடைக்கவேண்டும். தற்போது ஒரு சில நூறு அப்ளிகேஷன்கள் மட்டுமே கிடைக்கின்றன.
விண்டோஸ் விஸ்டா சிஸ்டத்திற்கு ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பின்னர், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அறிவித்த நாளில் சரியாக, அதற்குத் தேவையான அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
விஸ்டா சிஸ்டம் 20% பயனாளர்களைக் கூட அடையாத நிலையில், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள மைக்ரோசாப்ட் அனைத்து முயற்சிகளையும் சரியாக எடுத்து, விண்டோஸ் 7 சிஸ்டத்தினை வெளியிட்டது. இப்போதும் அதே கட்டுப்பாடுடன் மைக்ரோசாப்ட் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments

  1. உண்மை... ஆவல் அதிகரித்துள்ளது...
    தொடருங்கள்...
    நன்றி...

    ReplyDelete

Post