மனிதர்களின் எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் தொலைபேசிகளின் எண்ணிக்கை.www.99likes.blogspot.comஉலகில் இதுவரை 6 பில்லியனுக்கு மேற்பட்ட மொபைல் பாவனையாளர்கள் உள்ளனர். புதிய உலக வங்கி  அறிக்கையின் படி, இந்த எண்ணிக்கை விரைவில் மனிதர்களின் தொகையை விட அதிகரிக்கும். 12  ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு குறைவான மொபைல் பாவனையாளர்களே  இருந்தனர். இன்று, உலக சனத்தொகையின் முக்கால் வீதமானவர்கள் மொபைல் பாவனையாளர்கள்.
2000 முதல் 2010 ஆம் ஆண்டு வரை, வருவாய் குறைந்த / நடுத்தரமாகவுள்ள நாடுகளின் மொபைல் பாவனை  1500% ஆல் அதிகரித்துள்ளது. ( பல நாடுகளில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம் அட்டை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது.)
மொபைலின் முக்கியமான பயன்பாடு குரல் வழி தொடர்பாடல் (Voice Call ) என்றாலும் எழுத்து மூல செய்தி  அனுப்புதல் (Texting) இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2010 இல் மட்டும் கிட்டத்தட்ட 5 டிரில்லியன்  எழுத்து மூல செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மொபைல் சேவை வழங்குனரின் 80% ஆன வருவாய் இந்த  160 எழுத்து செய்தியில் அடங்கியுள்ளது.
வளர்ந்து வரும் நாடுகளில் மொபைல் விற்பனை இளைய தலைமுறையில் தான் தங்கியுள்ளது. 15  வயதுக்குட்பட்டவர்களின் மொபைல் பாவனை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 29% ஆகவுள்ள  அதேவேளை அபிவிருத்தியடைந்த நாடுகளில் 17% ஆகவே உள்ளது.

Comments

Post