உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம் .

ஒருவர் எங்களை வாழ்த்தினால் எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி அதுபோலத்தான் மற்றவர்களுக்கும் எனவே மற்றவர்களை வாழ்த்துங்கள். அதுவும் வித்தியாசமான முறையில் என்றால் அதுவும் சிறப்பு தானே.


உங்களின் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் புகைப்படங்களைக்கொண்டு அனிமேஷன் வடிவில் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறன வாழ்த்து அட்டைகளை வடிவமைக்க WWW. CARDFUNK.COM என்ற தளம் உதவுகிறது. 
 இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கான வாழ்த்து வடிவினை  தெரிவுசெய்தால் PREVIEW அருகில் தோன்றும் 
தெரிவு செய்த படத்தின் கீழ் CLICK BUTTON TO START CREATING CARD என்பதற்கு பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் தோன்றும்; 

இதிலே upload from pc என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை upload செய்யவும் 
upload செய்யும் போது புகைப்படங்களின் அளவினை மாற்றி பொருத்தமாக வடிவமைக்கவும். அனைத்தையும் upload செய்தபின் உங்கள் புகைப்படங்களை மௌஸ் ஆல் இழுத்து காட்டுன் படங்களில் சேர்கவும் ; 
பின்னர் next என்பதை கிளிக் செய்து வாழ்த்து செய்தியை டைப் செய்து இமெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம் . 
தள முகவரி http://www.cardfunk.com/

Comments

 1. அருமையா இருக்கு...

  நன்றி...

  ReplyDelete
 2. நல்ல பதிவு

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

  ReplyDelete

Post