ஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்

ஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்

ஆன்லைனில் ஆர்டரைப் போட்டால் போதும், எல்லாமே வீடு தேடி வந்துவிடும் காலம் இது! அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் வந்துவிட்டாலும்கூட, இன்னும் நம்மில் பலருக்கு ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே பயமாகத்தான் இருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி செய்ய வேண்டும்? எந்தெந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்? உண்மையில் இது லாபகரமானதா? உங்களை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விடைகள் இதோ...
ஷாப்பிங்குக்கு ரெடியா?
ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள் தேர்வு செய்துள்ள ஷாப்பிங் இணையதளத்திற்குள் சென்று, முதலில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் போன்றவை கேட்கப்படும். வழக்கமான யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் விஷயங்களும் உண்டு. அவ்வளவுதான்! இதைக் கொண்டு எளிதாக ஷாப்பிங் செய்யலாம். பணத்தை டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்தலாம். பணப் பரிமாற்றம் நடந்ததும், பொருள் வீட்டுக்கு அனுப்பப்படும். வாங்கும் பொருளுக்கான விற்பனை வரி, சேவைக் கட்டணம் போன்றவற்றையும் சேர்த்தே செலுத்தி விடுவதால், டெலிவரியின்போது எந்த வகைக்காகவும் நாம் பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை.
நன்மைகள்!
பொருட்களை வாங்க கடை கடையாகத் தேடி அலைய வேண்டியதில்லை. நேரம் மிச்சமாகும். அடுத்து தரமான பொருள். ஆன்லைன் ஷாப்பிங்கில் பெரும்பாலும் பிராண்டட் நிறுவனங்களின் பொருட்களே விற்கப்படுகிறது. அறிந்த நல்ல பிராண்டை ஆர்டர் செய்யும் பட்சத்தில், தரத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்காது. எல்லாவற்றையும்விட விலை குறைவு என்பது முக்கியமான விஷயம்.
கவனிக்க வேண்டியவை!

நம்பகமான இணைய தளத்தை தேர்வு செய்வதன் மூலமே ஏமாறாமல் இருக்க முடியும். தொலைபேசி எண் மற்றும் இ-மெயில் முகவரி குறிப்பிட்டுள்ள ஷாப்பிங் ஆன்லைன்களை தேர்வு செய்வது நல்லது.
தொலைபேசி எண் இருந்தால் அந்த எண்ணுக்கு போன் செய்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பொருட்கள் கைக்கு வராத பட்சத்தில் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க தொலைபேசி எண் அவசியம் தேவை.
இணையதளத்தில் பொருட்களை வாங்கியதும் அதை உறுதிப்படுத்த உங்களது மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். அந்த தகவலை பொருள் கைக்கு வரும் வரை பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அந்த தகவலில்தான் உங்களது வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தின் மதிப்பு, நீங்கள் பொருள் வாங்கிய தேதி முதற்கொண்டு எல்லாமே இருக்கும்.
Best Online Shopping Site : www.thambishopping.com

முக்கியக்குறிப்பு : இந்த  தகவல்கள் மழைக்காகிதம் பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.

Comments