கழிவறையை விட கைபேசிகளில் அதிகளவு பக்டீரியாக்கள்!!!!

கழிவறையை விட கைபேசிகளில் அதிகளவு பக்டீரியாக்கள்!!!!!!!!!


சமீபகாலமாக கைபேசிகளை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
கைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உட்பட பல கொடிய வியாதிகள் வரும் என்று கூறப்பட்டாலும் யாரும் அதை கேட்பதாக தெரியவில்லை.
இந்நிலையில் கைபேசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் கழிவறையில் இருக்கும் பக்டீரியாவை விட கைபேசிகளில் 10 மடங்கு அதிகளவு பக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம், கைபேசியை யாரும் சுத்தம் செய்வதில்லை. மேலும் தாங்கள் பயன்படுத்திய போனை மற்றவர்களுக்கு பேச கொடுக்கும் போது அவர்களிடமிருந்தும் பக்டீரியாக்கள் தொற்றிக் கொள்கின்றன.
கைபேசியை வாய் மற்றும் காதுடன் ஒட்டி வைத்து பேசுவதால் இந்த பக்டீரியாக்கள் எளிதில் தொற்றிக் கொள்கிறது.
பின்னர் இந்த கைபேசியை யார் யார் எல்லாம் பயன்படுத்துகின்றார்களோ அவர்களுக்கும் பக்டீரியா தொற்றிக் கொள்கிறது.
இதே போன்று ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த பக்டீரியா அதிகம் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Comments

  1. பயனுள்ள பதிவு பதிவிட்ட நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  2. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    ReplyDelete

Archive

Contact Form

Send