மைக்ரோசொப்டின் மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலின் பெயர் மாற்றம்

உலக புகழ்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனம் 32.4 கோடி பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையான ஹாட்மெயிலிற்கு, அவுட்லுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இன்று அனைவராலும் எளிதாக பயன்படுத்தப்படுவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தான்.
இந்த அவுட்லுக் மின்னஞ்சல் சேவையில் ஃபேஸ்புக் சாட் வசதியினை பெறலாம்.
அத்துடன் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வரும் தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
வேர்ட்ஸ், எக்ஸெல், பவர்பாய்ன்ட் போன்ற பக்கங்களில் அவுட்லுக் மூலம் எளிதாக எடிட் செய்யவோ, ஷேர் செய்யவோ முடியும்.
அவுட்லுக்கில் இணைக்கப்படும் புகைப்படங்களை ஸ்லைடு ஷோவில் பார்க்க முடியும்.
இன்னும் ஒரு முக்கிய வசதியாக ஸ்கைப் வீடியோ கால் வசதியினை இந்த மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கில் பெறலாம்.
ஆனால் இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதியை, இன்னொரு ஸ்கைப் வீடியோ கால் வசதி கொண்டவருடன் தான் பயன்படுத்த முடியும்.
சபீர் பாட்யா மற்றும் ஜேக் ஸ்மித் ஆகிய இருவரும் 1996ஆம் ஆண்டில் உருவாக்கிய இந்த ஹாட்மெயில் சேவையினை, மைக்ரோசொப்ட் நிறுவனம் 1997ஆம் ஆண்டில் 40 கோடி டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments

Post