உங்கள் புகைப்படத்தில் தேவையில்லாத நபரை அல்லது பொருளை நீக்க மிக அருமையான இலவச Software தயார்.


அனைவருக்கும் தாங்கள் புகைப்படங்களில் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே நினைப்பர். புகைப்படங்களை அழகாக்க அனைவரும் உபயோகப்படுத்தும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும்.
ஆனால் இந்த மென்பொருளை எவ்வாறு கையாள்வது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே மிக எளிதாக புகைப்படங்களில் உள்ள வாட்டர்மார்க்குகளையும், தேவையற்ற படங்களையும் நீக்க Inpaint என்னும் அருமையான மென்பொருள் ஒன்று உள்ளது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, உங்களுடைய தகவல்களை உள்ளிட்டு Absenden என்னும் பொத்தானை அழுத்தவும். அரைமணி நேரத்திற்குள் கடவுச்சொல்லுக்கான சுட்டி உங்கள் மின்னஞ்சலை வந்து சேரும்.
மின்னஞ்சலில் தரப்பட்டிருக்கும் லைசன்ஸ் கீயை குறித்து வைத்துக் கொள்ளவும். பின் Inpaint மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
அதன் பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும். பின் எந்த படத்தை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து, குறிப்பிட்ட பகுதியினை மட்டும் தெரிவு செய்து அழிக்கவும்.
அந்த இடத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன் இருந்தபடியே அழகாக இருக்கும். இதே போன்று பல்வேறு மாற்றங்களை இந்த மென்பொருளின் துணையுடன் செய்ய முடியும்.

Post