ஓவியம் வரைய இலவச மென்பொருள் (Smooth Draw - Free drawing software)

ஓவியம் வரைவதற்கு போட்டோஷாப், பெயிண்ட், கோரல் டிரா(Coral Draw) போன்று நிறைய மென்பொருள்கள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக இயற்கையான முறையில் ஓவியம் வரைவதற்கென்றே இம்மென்பொருள் உள்ளது. 

மென்பொருளின்  பெயர்: ஸ்மூத் டிரா (Smooth Draw)இம்மென்பொருளில் ஒரு ஓவியம் வரைவதற்கான அனைத்து கருவிகளும் உள்ளது. மென்பொருளைத் தரவிறக்கி உங்களது கற்பனைகளை ஓவியங்களாக தீட்டி மகிழுங்கள். இம்மென்பொருளின் மூலம் தீட்டப்படும் ஓவியங்கள், இயற்கையாக வரைந்த ஓவியங்களைப் போன்றே காட்சியளிப்பது இம்மென்பொருளின் சிறப்பு.


இது Tablet PC களிலும் சிறப்பாக இயங்கும். 

இம்மென்பொருளைத் தரவிறக்க: ஸ்மூத் டிரா

இம்மென்பொருளைக் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் ஒரு சில உங்கள் பார்வைக்கு: 

bird drawing image
பூ ஓவியம்

drawing image cat
பூனை ஓவியம்

drawing image flower
பூ ஓவியம்


drawing image bird
பறவை ஓவியம்drawing image bird
பறவை ஓவியம்
மென்பொருளில் உள்ள ஒரு சில கருவிகள்: 

1. பேனா(pen), 2. பென்சில்(pencil), 3. ட்ரைமீடியா(dry media), 4. ஏர் பிரஷ்(airbrush), 5. ப்ரிஸ்டில் பிரஸ்(bristle brush), 6. இமேஜை ஹோஸ்(image hose)

இத்தளத்தில் இம்மென்பொருளைப் பற்றிய ஆங்கில வரிகள்:

SmoothDraw is an easy natural painting and digital free-hand drawing software that can produce high quality pictures. Support many kinds of brushes (pen, pencil, dry media, airbrush, bristle brush, image hose, etc.), retouch tools, layers, image adjustment, and many effects... Works great with tablets and Tablet PC.


இப்பதிவு உருவான விதம்: 

நான் போட்டோஷாப்பில்(Photoshop) வேலைசெய்துகொண்டிருக்கும்போது ஒரு படத்திற்கு ஓவியம்போன்ற தோற்றத்தை கொடுக்க ஃபில்டர் எஃபக்ட்களில் (Filter Effect)முயன்றுகொண்டிருந்தேன். போட்டோஷாப்பில் இருக்கிற  அந்த பயன்பாடுகள் எனக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. எனவே நமக்கு விருப்பமான முறையில் இயற்கையான ஓவியம் போன்றே காட்சியளிக்க ஏதாவது ஒரு மென்பொருள் கிடைக்குமா என இணையத்தில் தேடும்போது இம்மென்பொருள் தேடிப் பெற முடிந்தது. நான் தேடிப்பெற்றதை அப்படியே பதிவாக உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.  பிடித்திருந்தால் திரட்டிகள், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பகிருங்கள். இதனால் உங்கள் நண்பர்களுக்கும் பதிவானது சென்றடையும். பதிவைப் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே..!!

Post